விருப்புரிமைக் கொடை

உங்கள் விருப்பப்படி ஒரு அன்பளிப்பைக் கொடுங்கள்.

உங்கள் விருப்புறுதியில் டெரிக் பிரின்ஸ் ஊழியங்களை நினைவு கூறுவது தேவனுடைய ராஜ்யத்தை மேம்படுத்துவதற்கும், நீடித்த மரபை விட்டுச் செல்வதற்கும் ஒரு அற்புதமான வழியாகும்.

சீஷர்களை உருவாக்குவதில் முதலீடு செய்யுங்கள்

ஒரு விருப்புரிமையை விட்டுச் செல்ல நீங்கள் செல்வந்தராக இருக்க வேண்டியதில்லை, மேலும் உங்கள் அன்புக்குரியவர்களை முதலில் கவனிக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், எந்த அளவிலான அன்பளிப்பும் மதிக்கப்படும், மேலும், அது உலகம் முழுவதும் உள்ள பல கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்களில் உள்ளவர்களின் வாழ்க்கையில் நமது கைகளால் பலனைத் தரும். உங்கள் பரிசின் மதிப்பு எவ்வளவாக இருந்தாலும், அது தேவைப்படும் ஒருவருக்கு பெரிதும் உதவ நீண்ட தூரம் பயணிக்கும்.

"டெரிக் பிரின்ஸின் போதனைகள், நான் ஒருபோதும் நினைக்காத வகையில் என் வாழ்க்கையை மாற்றினது. டெரிக்கின் வார்த்தைகளில் உள்ள வாழ்வை மாற்றும் தாக்கத்தை அனுபவிக்கும் அதே வாய்ப்பு எதிர்கால தலைமுறையினருக்கும் கிடைக்கும் என்பதே எனது ஆழந்த நம்பிக்கையாக இருக்கிறது. அதனால்தான், டெரிக் பிரின்ஸ் ஊழியத்திற்கு ஒரு விருப்புரிமையை விட்டுச் செல்ல நான் முடிவெடுத்தேன். இந்தப் பரிசு டெரிக்கின் போதனையை உயிரோடு வைத்திருக்க உதவும், மேலும், நாம் பரலோகத்தில் இருந்தாலும் கூட, பல ஆண்டுகளாக அநேகருடைய வாழ்வைத் தொடர்ந்து மாற்றும்.

உங்கள் விருப்புரிமை பரிசு ஆவிக்குரிய பசியில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு வேதாகம போதனைகளை அணுக உதவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், தேவாலயங்களிலும் மற்றும் உள்ளூர் சமூதாயங்களிலும் தேவனுடைய வார்த்தையின் வாழ்வை மாற்றும் வல்லமையை திறக்க பயன்படும்.

உங்கள் விருப்புரிமை பரிசு எப்படி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

  • உங்கள் விருப்புரிமை பரிசு, டெரிக் பிரின்ஸின் போதனைகளை உலகம் முழுவதும் உள்ள புதிய கிறிஸ்தவ தலைமுறைகளுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்யும்.
  • உங்கள் விருப்புரிமை பரிசு, டெரிக் பிரின்ஸின் போதனைகளை புதிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்படுவதற்கும், விசுவாசிகளின் பலத்தை அதிகரிப்பதற்கும் உதவும்.
  • உங்கள் விருப்புரிமை பரிசு, டிஜிட்டல் மூலமாக சீஷத்துவத்தை அமைப்பதற்கும், சுவிசேஷப் போதனைக்கு தேவையான கருவிகள் மற்றும் வளங்களை வழங்குவதை நிறைவேற்ற நீண்ட காலத்திற்கு உதவும்.
  • உங்கள் விருப்புரிமை பரிசு எதிர்கால போதகர்கள், வேதாகம கல்லூரி மாணவர்கள் மற்றும் சுவிசேஷகர்களை தேவனுடைய வார்த்தையை ஆழமாக ஆராய்ச்சி செய்யவும், கிறிஸ்துவுக்குள் புதிதானவர்களை சீஷர்களாக மாற்றவும் உதவும்.

எங்களை உங்கள் விருப்புரிமை ஆவணத்தில் சேர்த்துக் கொள்வது எப்படி

மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் நோக்கங்களைப் பற்றி கலந்து ஆலோசிப்பதையும், முழுமையான சட்ட ஆலோசனைக்காக ஒரு வழக்கறிஞரை அணுகுவதையும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
கோலின் டை
முகப்புப் பக்கம்
வளங்கள்
+
வளங்கள்ஆன்லைன் ஸ்டோர்செய்திஊழிய தளங்கள்
நாங்கள்
+
எங்களோடு இணைய
+
தொடர்புக்கு
+
White Facebook iconWhite YouTube iconWhite Instagram iconX iconPinterest icon