தனியுரிமைக் கொள்கை

டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மதித்து காப்பாற்றுகிறது. எங்களின் கொள்கை எளிதாக வாசிக்க கூடியதாகவும், தெளிவானதாகவும், வெளிப்படையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் தனியுரிமையை பாதுகாக்கும் எங்கள் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

இந்த இணையதளம் மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

வரையறை

தனிப்பட்ட தகவல் என்பது ஒரு தனிநபரை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தரவாகவும் (உதாரணமாக: பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவை) உள்ளது என எங்கள் வரையறை கூறுகிறது.

பாதுகாப்பு

உங்கள் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பை உறுதிசெய்ய, நாங்கள் சிறந்த நியாயமான முன்னெச்சரிக்கைகளை எடுக்கிறோம். இந்தத் தரவுகளை அனுமதியின்றி அணுகவோ அல்லது தவறாக பயன்படுத்துவதையோ தடுக்க, வடிவமைக்கப்பட்ட செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.

சேகரிப்பு மற்றும் பயன்பாடு

உங்களால் தன்னார்வமாக சமர்ப்பிக்கப்பட்ட தகவலை, சேகரிக்கும் நேரத்தில் குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்காக, சட்டப்படி நாங்கள் சேகரிக்கிறோம். இதில் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வழங்குதல் அல்லது நாங்கள் பெறும் தொடர்புகளும் அடங்கும்.

மூன்றாம் தரப்பினர்

சேவைப் பொறுப்புகளை நிறைவேற்ற அல்லது சட்டத்திற்கு உடன்பட்டு உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிர்வோம்.

நாங்கள் உங்கள் தரவுகளைப் பகிரும் போது:

  • அதை ஒருபோதும் விற்கமாட்டோம், வாடகைக்கு விடமாட்டோம் அல்லது வியாபாரம் செய்யமாட்டோம்.
  • எப்போதும் பாதுகாப்பான முறையில் பகிர்வோம்.
  • மூன்றாம் தரப்பினரை அவர்களது சொந்த சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்.

நொறுக்குத் தொல்லைகள்

பெரும்பாலான இணையதளங்களைப் போலவே, பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், அடையாளம் காட்டப்படாத மொத்த தரவுகளையும் மதிப்பீடு செய்யவும் நாங்கள் நொறுக்குத்தொல்லைகளை பயன்படுத்துகிறோம்.

நொறுக்குத்தொல்லைகள் என்பது நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் மூலம் உங்கள் கணினியில் வைக்கப்படும் சிறிய உரை கோப்புகளாகும். நொறுக்குத்தொல்லைகளை ஏற்றுக்கொள்ள நீங்கள் உலாவியை (உதாரணமாக: குரோம்) அனுமதிக்கும் போது இது நிகழ்கிறது.

இந்த செயல்பாட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்ள உலாவியின் உதவித் தகவல்களைப் பார்க்கவும்.

வெளிப்புற இணைப்புகள்

மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு தளத்தின் தனியுரிமைக் கொள்கைகளை மதிப்பாய்வு செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

ஒப்புதல்

இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

சில சந்தர்ப்பங்களில் நாங்கள் இந்த அறிவிப்பைத் திருத்தம் செய்யலாம். புதுப்பித்தலுக்குப் பிறகு இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவது ஒப்புதலைக் குறிக்கிறது. எங்கள் தனியுரிமை நடைமுறைகள் பற்றிய சமீபத்திய தகவல்களை அவ்வப்போது சரிபார்க்க இணையதள பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தனியுரிமைக் கொள்கைக்கு தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருக்குமானால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
முகப்புப் பக்கம்
வளங்கள்
+
வளங்கள்ஆன்லைன் ஸ்டோர்செய்திஊழிய தளங்கள்
நாங்கள்
+
நன்கொடை
எங்களோடு இணைய
+
தொடர்புக்கு
+
தொடர்புக்கு
White Facebook iconWhite YouTube iconWhite Instagram iconX iconPinterest icon