மக்கள் என்ன கூறுகிறார்கள்
"சில மாதங்களுக்கு முன்பு டெரிக் பிரின்ஸின் போதனைகளுக்கு நான் வழிநடத்தப்பட்டேன். நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் அவருக்கு போதுமான அளவு நன்றி கூற முடியவில்லை. ஆவிக்குரிய அறிவின் புதிய உலகம் எனக்கு திறக்கப்பட்டுள்ளது. நான் தினமும் அவருடைய போதனைகளைக் கேட்கிறேன், மேலும், அவரது போதனைகளுக்காக நம்முடைய பரம பிதாவுக்கு நன்றி கூறுகிறேன்".
கார்மென் எம், பிரான்ஸ்
"நான் சில வருடங்களாக யூடியூப்பில் டெரிக் பிரின்ஸின் போதனைகளை பார்த்து வருகிறேன். அவரது போதனைகள் மிகவும் திடமானதாகவும் புத்துணர்ச்சியாகவும் உள்ளன, உறுதியான போதனைகள் அரிதாக இருக்கும் காலத்திலும், இன்றும் கூட அவர் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறார்."
மினெர்வா ஓ, அமெரிக்கா
"உங்கள் போதனைகளில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்."
போதகர் லாசரஸ் பி, சாம்பியா
"நான் டெரிக் பிரின்ஸின் போதனைகளை கேட்டு வருகிறேன். அது என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. டெரிக் பிரின்ஸ் ஊழியங்களுக்கு நன்றி."
சுசன்னா டி, ஆஸ்திரேலியா
"டெரிக் பிரின்ஸின் போதனைகள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டன."
மிரியம் ஜி, ஐக்கிய இராஜ்ஜியம்
"நான் டெரிக் பிரின்ஸ் ஊழியங்களால் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்பட்டு உற்சாகப்படுகிறேன்! டெரிக் பிரின்ஸின் ஆழமான போதனைகளை எளிதில் கிடைக்கச் செய்ததற்கு நன்றி."
லின் சி, அமெரிக்கா
"இந்த ஊழியத்தை நான் நேசிக்கிறேன். நான் எதிரியின் பிடியிலிருந்து விடுபட்டேன்."
பட்ரிச் ஏ, டிரினிடாட் மற்றும் டொபாகோ
"தற்செயலாக நான் யூடியூப்பில் டெரிக் பிரின்ஸின் போதனைகளில் ஒன்றைப் பார்த்தேன். உலகில் நாம் இதை 'தற்செயலாக' என்று சொல்கிறோம், ஆனால் இது தற்செயலானதல்ல என்று எனக்குத் தெரியும். இது பரிசுத்த ஆவியானவர் என்னை எல்லா சத்தியங்களுக்கும் என்னை வழிநடத்துவதாக நம்புகிறேன். இது முதன்முதலில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பாக நடந்தது, நான் தினமும் பார்த்து வருகிறேன்."
லிசா ஜே, அமெரிக்கா
"நான் உண்மையாகவே டெரிக் பிரின்ஸ் ஊழியங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். உங்கள் போதனைகள் தெளிவாக உள்ளன, மேலும் நான் தொடர்ந்து கேட்பவர்களில் ஒருவனாக இருக்கிறேன்."
டேரில் எல், அமெரிக்கா
"தொற்றுநோய் பரவலின் முடக்கத்தின்போது டெரிக் பிரின்ஸின் பிரசங்கங்களை நான் கண்டுபிடித்தேன், அவரது போதனைகளை கேட்கும் போது சமாதானத்தையும், சந்தோஷத்தையும் உணர்ந்தேன்."
மெயிங், மலேசியா
"நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன், மேலும் கிறிஸ்தவத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன், ஆனால் சிலுவையில் கிறிஸ்து எனக்காக செய்ததை நான் அறியவில்லை. இயேசு மற்றவர்களுக்குதான் தேவைப்படுகிறார் ஆனால் எனக்கு அல்ல என்று நினைத்தேன். நான் ஒரு பாவ வாழ்க்கையை வாழ்ந்தேன். பல வருடங்களுக்கு பிறகு, என் வெறுமையான வாழ்க்கையால் நான் சோர்ந்து விட்டேன் மற்றும் நான் ஒரு உறுதியான திசையை நாடினேன். நான் கிடைக்கும் அனைத்து ஊக்கமூட்டும் வீடியோக்களையும் பார்த்தேன், ஆனால் என் உள்ளத்தில் நிலையான அமைதி இல்லை. சில கால தேடுதலுக்குப் பிறகு, நான் தேவனை உண்மையாக பெற வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஒரு இரவு, என் படுக்கையறையில் முட்டி போட்டு, தேவனிடம் மன்னிப்பு கேட்டேன், நான் மீண்டும் வேதத்தை வாசிக்கத் தொடங்கினேன். தேவன் என்னை ரோமர் 10:9-10 க்கு வழிநடத்தினார், அதை ஏற்றுக்கொள்ளும் விசுவாசத்தை எனக்கு அளித்தார். இறுதியாக, சிலுவையில் இயேசு கிறிஸ்து எனக்காக என்ன செய்தார் என்பதை அறிந்தேன். தேவனுக்கு ஸ்தோத்திரம்! உங்கள் யூடியூப் சேனலின் மூலம் எனது விசுவாசத்தை அதிகரிக்கும் நிறைய போதனைகளை நான் கண்டேன், மேலும் நான் கிறிஸ்துவோடு நடக்கும் பாதைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன."
சாமுவேல் செட், தைவான்
"டெரிக் பிரின்ஸின் போதனைகளை கேட்ட பிறகு, என் வாழ்க்கை இனிமேல் இதேபோல இருக்காது. இதுவரை இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது, எனது நடக்கையில், பேச்சில் மற்றும் சிந்தனையில் நான் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன். தேவனுக்கே மகிமை! நன்றி."
ஷான்டா ஜே, அமெரிக்கா
"டெரிக் பிரின்ஸ் எனது ஆசிரியர். நான் அவரிடமிருந்து தினமும் கற்றுக்கொள்கிறேன். அவர் என் வாழ்க்கையில் ஒரு ஆசீர்வாதமாக இருந்தார் மற்றும் இதற்காக நம் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி!"
கார்மென் ஆர் எம், பிரான்ஸ்
"உலகத்திற்கு உங்கள் நீடித்த உழைப்புக்கு நன்றி. கடந்த ஆண்டின் பெரும்பகுதியில் டெரிக் பிரின்ஸின் போதனைகளை நான் கேட்டேன். மிகவும் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருந்தது."
டேனியல், ஐக்கிய இராஜ்ஜியம்
"சில வருடங்களுக்கு முன்பு, தேவனுடைய வார்த்தையை எனக்கு கற்றுக்கொடுக்கக்கூடிய ஒருவரை நான் மிகவும் தீவிரமாகத் தேடி வந்தேன். அதற்கு முன்னர், என்னுடைய அறிவு வாசிப்பிலிருந்து மட்டுமே வந்தது. அப்போது நான் தேவனைத் தேடிக் கொண்டிருந்தபோது, யூடியூப்பில் டெரிக் பிரின்ஸின் போதனைகளை நான் கண்டேன். அது என்னை மயக்கியது. அதிலிருந்து தினமும் அவரது வீடியோக்களைப் பார்த்து வருகிறேன்."
புருனோ எஸ், போர்ச்சுகல்
"டெரிக் பிரின்ஸ் தனது போதனையின் மூலம் எனது கண்களைத் திறந்தார், மேலும், நான் பின்பற்றும் ஒரு எடுத்துக்காட்டை அமைத்துக் கொடுத்தார்."
லூசிண்டா, அமெரிக்கா
"எனது மனைவியும், நானும் யூடியூப்பில் டெரிக்கின் போதனைகளை கண்டுபிடித்தோம், மேலும், அது ஆவிக்குரிய போராட்டத்தைப் புரிந்துகொள்வதில் எங்களுக்கு உண்மையாக உதவியது. இப்போது நாங்கள் விடுவிக்கப்பட்டு, இயேசுவுடன் விசுவாசத்தில் தொடர்கிறோம்."
பியெட்ரோ பி, சுவிட்சர்லாந்து
"டெரிக் பிரின்ஸ் ஊழியங்களுக்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் உள்ளீர்கள்."
சார்லஸ் எம், அமெரிக்கா
"நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தேன், ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை என் ஆண்டவராகவும் ரட்சகராகவும் ஏற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு, யூடியூப்பில் டெரிக் பிரின்ஸ் போதனைகளை நான் கண்டு மன அழுத்தத்திலிருந்து குணமடைந்தேன். நான் நிறைய கற்றுக்கொண்டேன் மற்றும் நம்பகமான வேதாகம ஆசிரியரை (நிறைய தேடலுக்கு பிறகு) கண்டுபிடித்தேன். தேவனுடைய வார்த்தையையும் சுவிசேஷத்தையும் உலகம் முழுவதும் பரவ செய்ததற்காக டெரிக் பிரின்ஸ் ஊழியங்களுக்கு மிகுந்த நன்றி."
ஷ்ரேயாஸ் ஜே, இந்தியா
"இன்றுதான் டெரிக் பிரின்ஸின் ஒரு செய்தியை நான் பார்த்த முதல் நாள். அது மிகவும் ஊக்கமளிக்கிறது. நன்றி."
தெரேசா, அமெரிக்கா
"டெரிக் பிரின்ஸின் போதனைகளால் நான் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்."
அன்னம்மா க்யூ, இந்தியா
"டெரிக் பிரின்ஸ் ஊழியங்களுக்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். இதுபோன்ற ஆழமான நேரடி போதனைகளைப் பெறுவது ஒரு ஆசீர்வாதமாகும்."
அன் எம் பி, அமெரிக்கா
"சில நாட்களுக்கு முன்பு, நான் வேதத்தை வாசிக்க முயன்றேன், ஆனால் எனக்கு அது தெளிவாகப் புரியவில்லை, ஏனெனில் என்னிடம் கிங் ஜேம்ஸ் பதிப்பு மட்டுமே இருந்தது. வேறு பதிப்புகள் இருக்கின்றதைப் பற்றி நான் அறியவில்லை. நான் மிகவும் அறியாமையில் இருந்தேன். எனவே, ஒரு தேவாலயத்தைத் தேடிச் சென்றேன், ஏனென்றால் நான் நிச்சயமாக அங்கு கற்பிக்கப்படுவேன், அவர்கள் விளக்குவார்கள் என்று நினைத்தேன். நான் பலவற்றிற்குச் சென்று, இறுதியில் ஏமாற்றமடைந்தேன். என்னைச் சுற்றியுள்ள எவராலும் என்னை வழிநடத்த முடியவில்லை. எனவே, நான் கைவிட்டேன்! சமீபத்தில், நான் யூடியூபை பார்த்து கொண்டிருந்தபோது டெரிக் பிரின்ஸை கண்டு ஆச்சரியமடைந்தேன். இப்போது நான் அவரோடு இணைந்து விட்டேன்! நான் தேடிக் கொண்டிருந்த மனிதராக அவர் இருக்கிறார். அவரது வீடியோக்கள் இன்னும் வெளிவருவதற்கும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதற்கும் நான் மிகவும் நன்றியுடனிருக்கிறேன். நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்! அவருடைய வீடியோக்களை நான் தினமும் பார்த்து வருகிறேன்."
பெலிசா ஜி, அமெரிக்கா
"டெரிக் பிரின்ஸ் ஊழியங்களின் செய்திகளால் நான் பெரிதும் ஊக்கமளிக்கப்பட்டுள்ளேன். தேவனுடைய வார்த்தையை கற்றுக்கொள்ளவும், எங்களது குடும்பத்தில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதிலும் என் ஆசை தீவிரமடைந்துள்ளது. நீங்கள் வழங்கிய அனைத்து வளங்களுக்கும் நன்றி."
பில்லி பி, இந்தியா
"டெரிக் பிரின்ஸின் போதனைகள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டன. இப்போது நான் இதுவரை இல்லாத அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகத்தை பற்றி அதிகம் அறிந்திருக்கிறேன். பரிசுத்த ஆவியுடன் இந்த புதிய பயணத்தில் ஈடுபடுவதில் நான் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களைப் பற்றி கற்றுக்கொள்வது தேவனால் நியமிக்கப்பட்ட ஒன்றாகும். டெரிக் பிரின்ஸின் ஆன்லைன் வீடியோ செய்திகள் மூலம் கூட, எனது அறையில் தேவனுடைய வல்லமை வாய்ந்த பிரசன்னத்தை உணர்கிறேன். அவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி மற்றும் தேவனுடைய மனிதர் ஆவார். நான் பரலோகத்தில் அவரை சந்தித்து நன்றி சொல்ல காத்திருக்கிறேன்!
சுஸி கிரேஸ், ஐக்கிய அரபு அமீரகம்
"டெரிக் பிரின்ஸின் முழுமையான போதனைகளுக்கு நன்றி! அவரது அன்பு, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை துவக்கத்திலிருந்தே மிகவும் தெளிவாகத் தெரிந்தது! அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார்! அவர் எனக்கு மிகவும் விருப்பமான போதகர்களில் ஒருவர்! தேவன் அவரின் மூலம் பேசினார், என் கண்களை சத்தியத்திற்கு நேராக திறக்க உதவினார்!"
எலிசபெத், கனடா