உள்ளடக்கம்
(இருப்பிடத்திற்கு ஸ்க்ரோல் செய்து கிளிக் செய்யவும்)
- டெரிக் பிரின்ஸ் எங்கு பிறந்தார்?
- டெரிக் பிரின்ஸ் எப்போது பிறந்தார்?
- டெரிக் பிரின்ஸ் இறந்துவிட்டாரா?
- டெரிக் பிரின்ஸ் எத்தனை வயதில் இறந்தார்?
- டெரிக் பிரின்ஸ் எங்கு இறந்தார்?
- டெரிக் பிரின்ஸ் எங்கு அடக்கம் செய்யப்பட்டார்?
- டெரிக் பிரின்ஸ் எப்படி இறந்தார்?
- டெரிக் பிரின்ஸ் கொண்டிருந்த நம்பிக்கை என்ன?
- டெரிக் பிரின்ஸின் விருப்பமான வேதாகம மொழிபெயர்ப்பு எது?
- டெரிக் பிரின்ஸ் திருமணமானவரா?
- லிடியா பிரின்ஸ் எப்போது இறந்தார்?
- ரூத் பிரின்ஸ் எப்போது இறந்தார்?
- டெரிக் பிரின்ஸிற்கு பிள்ளைகள் இருந்தார்களா?
டெரிக் பிரின்ஸ் எங்கு பிறந்தார்?
பெங்களூர், இந்தியா.
டெரிக் பிரின்ஸ் எப்போது பிறந்தார்?
ஆகஸ்ட் 14, 1915.
டெரிக் பிரின்ஸ் இறந்துவிட்டாரா?
டெரிக் பிரின்ஸ் செப்டம்பர் 24, 2003 அன்று இறந்தார்.
டெரிக் பிரின்ஸ் எத்தனை வயதில் இறந்தார்?
88 வயது (1915-2003)
டெரிக் பிரின்ஸ் எங்கு இறந்தார்?
டெரிக் பிரின்ஸ் எருசலேமில் உள்ள அவரது வீட்டில் இறந்தார்.
டெரிக் பிரின்ஸ் எங்கு அடக்கம் செய்யப்பட்டார்?
அலையன்ஸ் சர்ச் சர்வதேச கல்லறை, எருசலேம்.
டெரிக் பிரின்ஸ் எப்படி இறந்தார்?
டெரிக் பிரின்ஸ் நீண்டகாலமாக இருந்த உடல்நலக் குறைவை தொடர்ந்து இருதய செயலிழப்பு காரணமாக தூக்கத்தில் இறந்தார் .
டெரிக் பிரின்ஸ் கொண்டிருந்த நம்பிக்கை என்ன?
டெரிக் பிரின்ஸ் ஒரு மதப் பிரிவை சாராத, பிரிவினைவாதம் இல்லாத பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர் ஆவார். அவருடைய நம்பிக்கைகள், விசுவாசம் மற்றும் நடைமுறை வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் நம்மை வழிநடத்துகிற விசுவாச அறிக்கையுடன் ஒத்துப்போகின்றன.
விசுவாச அறிக்கை"நீங்கள் எந்த மதப்பிரிவைச் சார்ந்தவர், எந்த சபைக்குச் செல்பவர்?," என்று சில சமயங்களில் என்னிடம் கேட்கும் மக்களுக்கு நான் தாவீதைப் போல பதிலளிக்க விரும்புகிறேன்: 'தேவனுக்கு பயப்படுகிற அனைவருக்கும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கும் நான் நண்பன்.' இது அடையாளப்படுத்தும் விஷயம் அல்ல. இதுதான் இருதயத்தின் நிலையும், வாழ்வின் பாதையுமாக இருக்கிறது." - டெரிக் பிரின்ஸ்
டெரிக் பிரின்ஸின் விருப்பமான வேதாகம மொழிபெயர்ப்பு எது?
டெரிக் கிங் ஜேம்ஸ் பதிப்பை விரும்பினார், மூல எபிரேய மற்றும் கிரேக்க உரையையும் ஆய்வு செய்தார்.
கேட்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்வதற்கு அவர் நவீன மொழிபெயர்ப்புகளான நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள், தி நியூ இன்டர்நேஷனல் பதிப்பு மற்றும் தி நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பை பெரும்பாலும் பயன்படுத்தினார். சில சமயங்களில், வேத பகுதியையும் அதன் பொருளையும் சிறப்பாக விளக்கினால், அவர் ஜெ.பி. பிலிப்ஸ் பைபிள், தி லிவிங்க் பைபிள் அல்லது ஆம்பிளிஃபைட் பைபிள் ஆகியவற்றையும் குறிப்பிடுவார்.
டெரிக் பிரின்ஸ் திருமணமானவரா?
“நான் லிடியாவுடன் 30 ஆண்டுகளும், ரூத் உடன் 20 ஆண்டுகளும் திருமணத்தில் இருந்தேன். ஒவ்வொரு திருமண வாழ்க்கையும் சந்தோஷமாகவும், வெற்றிகரமாகவும் இருந்தன.” - டெரிக் பிரின்ஸ்
லிடியா பிரின்ஸ் எப்போது இறந்தார்?
அக்டோபர் 5, 1975 (வயது 85)
ரூத் பிரின்ஸ் எப்போது இறந்தார்?
டிசம்பர் 29, 1998 (வயது 68)
டெரிக் பிரின்ஸிற்கு பிள்ளைகள் இருந்தார்களா?
டெரிக் பிரின்ஸ் 12 குழந்தைகளின் மறைந்த தந்தை ஆவார்.