நாங்கள் எதை நம்புகிறோம்

விசுவாச அறிக்கை

  1. ‘‘தேவன் ஒருவரே - நித்தியமாக நிலைத்திருக்கிற உண்மையான, உயிருள்ள தேவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று நபர்களாக இருக்கிறார்; அவர் ஆவியாகவே இருக்கிறார், எல்லையற்ற, நித்திய, அவரது அன்பு, இரக்கம், வல்லமை, ஞானம் மற்றும் நீதியில் மாற்றமில்லாதவராக இருக்கிறார். (ஏசாயா 45:22, சங்கீதம் 90:2; யோவான் 4:24; 2 கொரிந்தியர் 13:14)
  2. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்; அவர் தனது கன்னிப்பிறப்பின் மூலம் அவதாரம் எடுத்தவர் ; அவர் தன் தெய்வத்துவத்திலும், மனித தன்மையிலும் பரிபூரணமானவர். அவர் தன் உயிரை சுய-விருப்பத்தினாலே மனிதனின் பாவங்களுக்காக ஒரே போதுமான மற்றும் பரிபூரண பதிலீடு செய்யும் பலியாக கொடுத்தார்; அவருடைய பாவநிவர்த்தியின் மூலம் மனிதன் பாவத்திற்கான தண்டனை, குற்ற உணர்வு மற்றும் குற்றவிளைவுகளிலிருந்து விடுதலையை அடைய முடியும்; அவர் மரித்தோரிலிருந்து சரீரபிரகாரமாக எழுந்து, மகிமையடைந்த சரீரத்தை கொண்டு அவர் இப்போது பரலோகத்தில் அமர்ந்து, விசுவாசிகளுக்காக பரிந்துபேசிக் கொண்டிருக்கிறார்; அவர் தனது ராஜ்யத்தை ஸ்தாபிக்க மீண்டும் தம்முடைய மகிமையடைந்த சரீரத்தில் வருகிறார் . (மத்தேயு 1:18–25; யோவான் 1:14; கொலோசெயர் 1:13–18; 1 பேதுரு 2:24; லூக்கா 24; எபிரெயர் 4:14; மத்தேயு 25:31–46)
  3. பரிசுத்த ஆவியானவர் பிதாவாகிய தேவனுடனும் குமாரனுமான தேவனுடனும் தெய்வத்துவத்தின் ஒவ்வொரு பண்புகளிலும் சமமாக இருக்கிறார்; கிறிஸ்துவை இரட்சகராகப் பெறுபவர்களில் மறுபிறப்பின் அதிசயத்தை செய்கிறார், இப்போது விசுவாசிகளில் வாழ்கிறார்; அவர்களை மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையிடுகிறார்; அவர்களுக்கு சேவைசெய்ய வல்லமை அளிக்கிறார்; கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டியெழுப்புவதற்காக கிருபை வரங்களை வழங்குகிறார். (எபேசியர் 4:30; 1 கொரிந்தியர் 6:19; 12:4, 7, 12-13; அப்போஸ்தலர் 1:5; தீத்து 3:5)
  4. உண்மை என்பது முழுமையானது மற்றும் குறிக்கோளுடையது. வேதாகமத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் மீட்பின் உண்மை முன்வைக்கப்பட்டுள்ளது, அது தேவன் மனிதனுக்கு அளித்த எழுதப்பட்ட வெளிப்பாடாகும், வாய்மொழியால் ஊக்குவிக்கப்பட்டு மூல பிரதிகளில் தவறில்லாமல் பதிக்கப்பட்டது. விசுவாசம் மற்றும் அதின் நடைமுறை ஆகிய எல்லா காரியங்களிலும் ,வேதாகமம்தான் உன்னதமான மற்றும் இறுதி அதிகாரமுடையது. (மத்தேயு 5:18; 2 தீமோத்தேயு 3:15–17; 2 பேதுரு 1:20–21)
  5. சபை என்பது பூமியில் கிறிஸ்துவின் ஒருங்கிணைந்த சரீரமாகும்; இது ஐக்கியத்திற்காகவும், சீர்பொருந்துதலுக்காகவும், கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் சாட்சி மூலம் சுவிசேகஷத்தை எல்லா தேசங்களுக்கும் எடுத்துச்சொல்வடற்கும் உள்ளது. (மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:6–8, 2:41–42; 1 கொரிந்தியர் 12:13)
  6. மனிதன் தேவனின் சாயலில் படைக்கப்பட்டான், ஆனால் ஆதாமின் பாவத்தின் மூலம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படான். மனிதனின் நிலைமைக்கு ஒரே தீர்வு, இயேசு கிறிஸ்துவினுடைய ஆள்தத்துவம் மற்றும் மீட்பின் கிரியையில், தனிப்பட்ட விசுவாசம் வைப்பதின் மூலம் இரட்சிப்பை பெறுவதே. (யோவான் 3:15–18; எபேசியர் 1:7; ரோமர் 10:9–10)
  7. வரையறுக்கப்பட்ட, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவிகள் உள்ளன; அவைகளில் வீழ்ச்சி அடையாத தேவதூதர்கள், விழுந்துபோன தேவதூதர்கள் மற்றும் பிசாசுகளும் உட்படும். விழுந்துபோன தேவதூதரின் தலைவனான சாத்தான், தேவனுக்கும் மனிதனுக்கும் வெளியரங்கமான எதிரி , அக்கினிக் கடலில் அழிவுக்கென்று நியமிக்கப்பட்டுள்ளான். (எபிரெயர் 1:4–14; யூதா 6; மத்தேயு 25:41; வெளிப்படுத்துதல் 20:10)
  8. இரட்சிக்கப்பட்டவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும்; இரட்சிக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவனுக்கும், இழந்துபோனவர்கள் நித்திய அழிவுக்கும் எழுந்டிருப்பார்கள். (1 கொரிந்தியர் 15; தானியேல் 12:1–2; யோவான் 5:28–29; 2 தெசலோனிக்கேயர் 1:7; மத்தேயு 5:1–10)
முகப்புப் பக்கம்
வளங்கள்
+
வளங்கள்ஆன்லைன் ஸ்டோர்செய்திஊழிய தளங்கள்
நாங்கள்
+
நன்கொடை
எங்களோடு இணைய
+
தொடர்புக்கு
+
தொடர்புக்கு
White Facebook iconWhite YouTube iconWhite Instagram iconX iconPinterest icon