வரலாறு
இது அனைத்தும் 1971-ஆம் ஆண்டு, டெரிக் பிரின்ஸ் ஃபுளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் உள்ள தனது வீட்டின் கேரேஜில் அலுவலகத்தைத் திறந்த போது தொடங்கியது. முதலில் டெரிக் பிரின்ஸ் பதிப்பகங்களாக அறியப்பட்டு, செழிப்பான வேதாகம போதனை ஊழியமாக பலனளித்தது, இது 1944-இல், கர்த்தர் அவரிடம் பேசியபோது விதைக்கப்பட்டது, அவர் சொன்னதாவது :
"நீ கிறிஸ்து இயேசுவில் உள்ள சத்தியத்திலும், விசுவாசத்திலும், அன்பிலும், வேதத்தை அநேகருக்கு போதிக்க அழைக்கப்பட்டிருக்கிறாய்"
இந்த வார்த்தைகள் ஆவிக்குரிய பசியில் இருப்பவர்களுக்கு உணவளிக்க டெரிக்கின் முயற்சிகளை வலுப்பெற செய்தது, "சுயமாய் வேதத்தைக் கற்பதற்கான பாடங்கள்" (1969), "விடுதலையாக்கும் சத்தியம்" (1966), "மனந்திரும்பி விசுவாசியுங்கள்" (1966) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி சுயமாக வெளியிட அவரைத் தூண்டியது. இந்த தலைப்புகளின் வெற்றிக்கும், தேவனுடைய உண்மைத்தன்மைக்கும் சான்றாக டெரிக் பிரின்ஸ் பதிப்புகள் அதிகமாக மேம்பட்டது.
1972-இல், தனி நபராக பணியை செய்த டெரிக்கின் செயலாற்றலைவிட தயாரிப்பு அதிகமாக வளர்ந்து, அவரின் மருமகனான டேவிட் செல்பி என்பவரை உதவிக்கு அழைத்தது. இருவரும் இணைந்து, அதிகமாக விரிவடைந்து வரும் இந்த ஊழியத்தின் பாதையை உருவாக்கி, வானொலி ஒளிபரப்பில் ஈடுபட்டு, புதிய புத்தகங்களையும் வெளியிட்டார்கள்.
1980களில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, யுனைடெட் கிங்டம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வெளிநாட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டன, இது தேசங்களில் சீஷர்களை உருவாக்கும் கனவை திடப்படுத்தியது. இந்த பத்தாண்டு காலத்தின் இறுதியில், டெரிக் உலக முழுவதும் மூன்று முறை வேதாகம போதனை பயணங்களை முடித்தார், அவரது வானொலி நிகழ்ச்சி ஆறு கண்டங்களிலும் பத்து மொழிகளில் பரவலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
1990 ஆம் ஆண்டு, டெரிக் பிரின்ஸ் பதிப்புகளாக இருந்த பெயர் அதிகாரப்பூர்வமாக டெரிக் பிரின்ஸ் ஊழியங்களாக மாற்றம் செய்யப்பட்டது. இலவச வேதாகம போதனைப் பொருட்களின் விநியோகம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 140 நாடுகளில் வழங்கப்பட்டது, தற்போது டெரிக் எழுதிய புத்தகங்கள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கின்றன.
இன்று, டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் உலகம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ளது, ஒவ்வொரு தேசத்திலும், கலாச்சாரத்திலும் மொழியிலும் வேதத்தை போதிப்பதற்கான முழு மனதுடன் உறுதியாக உள்ளது. 1941-ஆம் ஆண்டில் கர்த்தர் டெரிக்கிடம் பேசியதாகக் கூறிய தீர்க்கதரிசன வார்த்தையை இந்த ஊழியத்தின் வளர்ச்சியும் வெற்றியும் உறுதிப்படுத்துகிறது, அவர் சொன்னது:
"அது ஒரு சிறு நீரோடை போல் இருக்கும். அந்த சிறிய நீரோடை ஒரு நதியாக மாறும். அந்த நதி ஒரு பெரும் நதியாக மாறும். அந்த பெரிய நதி ஒரு கடலாக மாறும். அந்த கடல் ஒரு வலிமையான பெருங்கடலாக மாறும், அது உன் மூலமாக நிகழும்: ஆனால் எப்படி நடக்கும் என்பதை நீ அறிய கூடாது, நீ அறிய முடியாது, நீ அறியவும் மாட்டாய்."
இந்த வார்த்ததையில் இருந்த தேவனுடைய உண்மைத்தன்மையே டெரிக் பிரின்ஸ் ஊழியங்களை இன்று இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்துள்ளது, மேலும், இந்த ஊழியத்தை "வலிமையான பெருங்கடலாக" தொடர்ந்து கொண்டுவரும்.
டெரிக் பிரின்ஸ் எழுதிய, ஒலி மற்றும் ஒளி சார்ந்த பொருட்களின் பரந்த காப்பகத்துடன், ஊழியமானது தொடர்ந்து புதிய புத்தகங்களை வெளியிடுகிறது. இன்றுவரை, 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டு, 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.